தியேட்டர் ரிலீஸ் ஹவுஸ்ஃபுல் ஆனதால் தீபாவளி ரேஸில் நேரடியாக ஓடிடியில் குதித்த ஹரிஷ் கல்யாண் படம்..!

Published : Oct 29, 2026, 09:26 AM IST

Diwali Release Movies : 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆவதால், ஹரிஷ் கல்யாண் நடித்த புதுப்படம் ஒன்று நேரடியாக ஓடிடிக்கு வருகிறது.

PREV
14
OTT Release for Diwali

தீபாவளி பண்டிகை என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சம் இருக்காது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நயன்தாரா, சூர்யா, யாஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன. தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் எக்கச்சக்கமாக இருப்பதால், அதற்கு பதிலாக நேரடியாக ஓடிடியில் ஒரு புதுப்படம் களமிறங்குகிறது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த அப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ

24
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் புதுப்படம்

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நூறு கோடி வானவில் திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை இயக்குநர் சசி இயக்கி உள்ளார். இவர் பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் தான் நடத்தப்பட்டது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஓடிடியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Diwali Movies : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க... அடுத்தடுத்து தீபாவளி ரேஸில் குதித்த 4 பிரம்மாண்ட படங்கள்...!

34
கட்டணம் செலுத்தி பார்க்கும் முறை

இப்படம் மற்ற ஓடிடி வெளியீடுகள் போல் இல்லாமல், கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் (Pay Per View) ஓடிடிக்கு வருகிறது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம், வழக்கமான லவ் ஸ்டோரி போல் இல்லாமல், வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை பாலாஜி சுபா மற்றும் அருண் அருணாச்சலம் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த ஆண்டு நூறு சாமி என்கிற வெற்றிப் படத்தை கொடுத்திருந்த சசி, தற்போது நூறு கோடி வானவில் படம் மூலம் ஓடிடி ரசிகர்களை கவர்வாரா? என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

Thalai Deepavali : தலை தீபாவளி 2026.. புதுமணத் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பது முதல் விருந்து வரை.. மறைந்திருக்கும் பாரம்பரிய ரகசியங்கள்!

44
தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

தீபாவளிக்கு தியேட்டரில் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் சூர்யாவின் சீன் திரைப்படமும் ஒன்று. ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா உடன் நஸ்லின், நஸ்ரியா, ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இதனுடன் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் திரைக்கு வருகிறது. சுந்தர் சி இயக்கியுள்ள இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. இதுதவிர சாய் பல்லவி, யாஷ், ரன்பீர் கபூர் நடித்த இராமாயணா என்கிற பான் இந்தியா படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இவற்றுடன் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள அப்பா குட்டி திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை மு. மாறன் இயக்கி உள்ளார்.

Diwali shopping: தீபாவளி ஷாப்பிங் சீக்ரெட்.! ரூ.2,000, ரூ.5,000, பட்ஜெட்டில் என்னென்ன வாங்கலாம்? நடுத்தரக் குடும்பங்கள் பணத்தை சேமிப்பது எப்படி?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories