Exclusive: கடைசி நேரத்தில் ஹரி வைரவனுக்கு என்ன நடந்தது? கதறும் மனைவி கவிதா..!

First Published | Dec 3, 2022, 3:16 PM IST

காமெடி நடிகர் ஹரி வைரவன் இறந்து விடுவார் என, நினைத்து கூட பார்க்கவில்லை என, அவருடைய மனைவி கதறியபடி, அவரின் கடைசி தருணம் குறித்து ஏசியா நெட் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் இதோ.
 

தமிழில், இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம், காமெடி நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர் ஹரி வைரவன். இதை தொடர்ந்து, குள்ளநரி கூட்டம், நான் மஹான் அல்ல போன்ற படங்களில் நடித்த இவர், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய நிலையில்,  இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஹரி வைரவனுக்கு திடீர் என, கை கால்கள் வீங்க துவங்கியது. இதை தொடர்ந்து, மருத்துவரை அணுகியபோது... பல டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டு உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்து கொண்டே இருந்ததால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹரி வைரவனால், அதிகம் செலவு செய்து தனியார் மருத்துமனையில் சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்படவே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Tap to resize

ஒருமுறை, தூங்கி கொண்டிருக்கும் போதே... ஹரி வைரவன், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரின் சிகிச்சைக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த, பிளாக் பாண்டி, சூரி, கார்த்தி, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் உதவி செய்துள்ளனர். மேலும் பல சமூக ஊடகங்களுக்கு கவிதா பேட்டி கொடுத்ததை, பார்த்துவிட்டு சிலர் மட்டுமே உதவியதாக கூறப்பட்டது.

திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா..! கனவுக்குள் நுழைகிறேன் சோஹைல் கதுரியா வெளியிட்ட வீடியோ!

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, நடக்க முடியாத நிலையில் இருந்த வைரவனை குழந்தை போல் அவருடைய மனைவி பார்த்து கொண்டார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, இன்று அதிகாலை 12:15 மணிக்கு உயிரிழந்துள்ளார். இது குறித்து கவிதா ஏசியா நெட் இணையதளத்திற்கு வைரவனின் கடைசி தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

எப்போதும் போல், இரவு உணவு அருந்திவிட்டு மாத்திரை, மருந்துகளை எடுத்து கொண்ட ஹரி வைரவன், தூங்க செல்லும் முன் தன்னுடைய மனைவி கவிதாவுடன், பேசி கொண்டிருந்தாராம். பின்னர் தனக்கு ஒரு மாதிரி இருக்கிறது என கூறியுள்ளார். உடனே கவிதா அவரை ஆசுவாச படுத்தி, படுக்க வைத்துள்ளார். பின்னர் மயக்க நிலைக்கு சென்ற இவர், தன்னுடைய இறுதி மூச்சையே விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷிவினை தாக்கிய தனலட்சுமி..! பிக்பாஸ் வீட்டிற்குள் அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நலம் தேறி, நடக்க ஆரம்பித்த நிலையில்... தற்போது அவருடைய மரணம் ஏற்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும்  தெரிவித்துள்ளார். இவருடைய இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. மேலும் இவருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின், மரணத்தை அறிந்த பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உடல்நல குறைவால் மரணம்..!

Latest Videos

click me!