இவருக்கு இந்த நிலையா? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 'நான் ஈ' பட நடிகை! மொட்டை தலையுடன் வெளியான ஷாக் புகைப்படம்!

Published : Dec 21, 2021, 10:57 AM ISTUpdated : Dec 21, 2021, 11:49 AM IST

பல தெலுங்கு திரைப்படங்களிலும், தமிழில் இயக்குனர் ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' (Naan e) படத்திலும் நடித்திருந்த நடிகை ஹம்ச நந்தினி (Hamsa nandhini) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மொட்டை தலையுடன் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

PREV
18
இவருக்கு இந்த நிலையா? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 'நான் ஈ' பட நடிகை! மொட்டை தலையுடன் வெளியான ஷாக் புகைப்படம்!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற திரைப்படம் 'நான் ஈ'. இந்த திரைப்படம் நடிகர் நானிக்கு மட்டும் இன்றி திரையுலகில் சமந்தாவுக்கும் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

 

28

இதுவரை வெளியாகாத வித்தியாசமான கதையை ராஜமௌலி இயக்கி ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தார்.  அதிலும் ஒரு ஈ மனிதனை பழிவாங்கும் விதம், யூகித்து கூட பார்க்க முடியாத காட்சிகளை காட்டி ரசிக்க வைத்தார்.

 

38

இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை, ஹம்சா நந்தினி. இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என சுமார் 25 க்கும்   மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

48

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஹம்ச நந்தினி தற்போது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் போட்டுள்ள பதிவு ஒட்டு மொத்த ரசிகர்களையும், திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

58

மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தற்போது 3 ஆவது நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

 

68

இதற்காக தற்போது கீமோ தெரபி சிகிச்சை எடுத்து வருகிறாராம், ஏற்கனவே அவருடைய அம்மாவும் இதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தற்போது இவருக்கும் இதே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

78

இதுகுறித்து நடிகை ஹம்ச தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது, அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டிகள் அகற்றப்பட்டு விட்டத, அதே நேரம் புற்று நோய்  பரவலுக்கான வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறி இருந்தாலும்,  அது குறைந்த காலம் மட்டுமே...  மீண்டும் வருவதற்கு வாய்ப்புகளும் உள்ளதாக எச்சரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

 

88

9 முறை கீமோதெரபி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதில் இதுவரை இரண்டு முடித்து விட்டதாகவும், மீதம் உள்ள 7 கீமோ மீதம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது நிலை குறித்து அறிந்த ரசிகர்கள் தற்போது இவர் விரைவில் அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories