ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஹாப்பி ராஜ்' படம், வார இறுதியில் நல்ல வசூலை பதிவு செய்து தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், வெள்ளிக்கிழமை வெறும் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்து சற்று ஏமாற்றமான தொடக்கத்தை பெற்றது. ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் நேர்மறையான கருத்துக்களை பரப்பியதால், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் வசூல் படிப்படியாக உயர்ந்தது. சனிக்கிழமை சுமார் ரூ.1 கோடி வசூலான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதை தாண்டி ரூ.1.05 கோடி வசூலாகியிருக்கிறது. இதன்மூலம் படத்தின் மூன்று நாள் மொத்த இந்தியா நிகர வசூல் ரூ.2.75 கோடியை தொட்டிருக்கிறது.
24
ஹாப்பி ராஜ் வசூல்
தமிழ் பதிப்பு மட்டுமே ஞாயிற்றுக்கிழமை 832 காட்சிகளில் 31 சதவீத ஆக்கிரமிப்புடன் ரூ.1 கோடி வசூலித்திருக்கிறது. தெலுங்கு டப்பிங் பதிப்போ 142 காட்சிகளில் 22 சதவீத ஆக்கிரமிப்புடன் ரூ.5 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது. இந்தப் படத்தில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் திரைக்கு திரும்பியிருக்கிறார். அவரது மறுவருகை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மாரியான், பிரார்த்தனா, கீதா கைலாசம், மதுரை முத்து, அதிர்ச்சி அருண், தேவி மகேஷ் என பலர் நடித்திருக்கின்றனர்.
34
ஹாப்பி ராஜ் கதை
தன் தந்தையின் சமூக களங்கத்தால் வாழ்க்கையில் தொடர்ந்து நிராகரிக்கப்படும் ஆனந்தராஜ் என்ற இளைஞன், புதிய வாழ்க்கையை தேடி பெங்களூரு செல்கிறான். அங்கே கவ்யாவை சந்திக்கும் அவன் மனதில் காதல் துளிர்விடுகிறது. ஆனால் திருமணம் பேசும் தருணத்தில் இரு குடும்பங்களின் வர்க்க வேறுபாடுகளும், கலாசார முரண்பாடுகளும் தடையாக நிற்கின்றன. சுயமரியாதைக்காக போராடும் ஒரு இளைஞனின் உணர்வுப்பூர்வமான கதையை இந்தப் படம் சொல்கிறது.
வார இறுதியில் கிடைத்த நேர்மறையான வாய் வார்த்தைகள் படத்திற்கு உதவியிருக்கின்றன. இனி வரும் வார நாட்களில் வசூல் தக்கவைக்கப்பட்டால், 'ஹாப்பி ராஜ்' வணிக ரீதியாக லாபகரமான படமாக மாறலாம். இந்த வாரம் வெளியான ஹாப்பி ராஜ் படத்தைக் காட்டிலும் கடந்த வாரம் கென் கருணாஸ் இயக்கத்தில் ரிலீஸ் ஆன யூத் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படம் 50 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.