இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். நேரமும், காலமும் இல்லாத நிலையில், பிரபலங்களுக்கும் அழைப்பில்லாமல் அவசர அவசரமாக வீட்டில் பால் காய்ச்சியுள்ளார்.
மின்சார அடுப்பில் பால் காய்ச்சி ஹாலில் வைத்து பூஜை போடப்பட்டுள்ளது.
சாமி படைத்த பிறகு குடும்பத்துடன் பூஜை செய்கிறார். அப்புறம் என்ன மகன், மகள்களுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார். ஜிபி முத்துவின் வீடானது 2 ரூம், ஒரு கிச்சன் மற்றும் ஒரு ஹால் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.