ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் , விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் பலர் இவருடன் ஜோடி சேர்த்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றுள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா பறந்தார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, கை குழந்தையோடு சென்னைக்கு வந்தார்.
பின்னர் சின்னத்திரைகளில் கவனம் செலுத்த துவங்கிய கௌதமி, சுமார் 10 வருடங்கள் நடிகர் கமலஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் மகளின் வருங்காலத்தை கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
காஸ்டியூம் டிசைனராகவும், அரசியல் காட்சியிலும் கவனம் செலுத்தி வரும் கௌதமி, திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தாததற்கு தன்னுடைய மகள் சுப்புலக்ஷ்மி தான் காரணம் என கூறியுள்ளார். அவரை நன்றாக வளர்க்கவேண்டும் என்பதாலேயே திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
தற்போது மகள், நன்கு வளர்ந்துவிட்டதாலும், தைரியமாக பேசும் பெண்ணாக இருப்பதால் இனி நான் நடிக்க தடை இல்லை, எனவே படங்களில் நடிக்க கவனம் செலுத்த துவங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
மகள் சுப்புலட்சுமிக்கு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்றாலும், வரும் காலத்தில் அவர் திரை துறையை தேர்வு செய்தால் எவ்வித தடையும் நான் கூறமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் கௌதமி.