Nazriya Nazim: 'ராஜா ராணி' படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்களே... ஸ்லீவ் லெஸ் சல்வாரில் செம்ம கியூட்!

First Published | Nov 14, 2021, 2:36 PM IST

திருமணத்திற்கு பின்பும், துரு துரு நடிகையாக வலம் வரும் நஸ்ரியா (Nazriya Nazim)  தற்போது, நீல நிற சல்வாரில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

2006 ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'பளிங்கு' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. பின்னர் தொடர்ந்து, மாமூட்டி மற்றும் மோகன் லால் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தாலும், படிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் திரையுலகை விட்டு விலகினார்.

Tap to resize

மீண்டும் மூன்றே ஆண்டுகளில் கதாநாயகி வாய்ப்பு இவரது கதவை தட்டியது. 2013 ஆண்டு தொடர்ந்து நான்கு படங்களில் நாயகியாக நடித்தார்.

இதில் தமிழ் மற்றும் மலையாளத்தில் இவர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த நேரம், மற்றும் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த ராஜா ராணி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த நஸ்ரியா... முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே வருடத்தில், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்ய உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நஸ்ரியா... தற்போது மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதால்... துளியும் கவர்ச்சி காட்டாமல் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுத்தி வருகிறது.

Latest Videos

click me!