இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக, மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.
தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீர் என அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.
வலிமை படத்தை முடித்த கையேடு, தல தற்போது பைக் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் ரசிகர்களுடன் தல எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மாஸ் காட்டி வருகிறது.
அதே போல் தல ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று, வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட... BTS புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறது.
வலிமை படம் முடிவடைந்து விட்டதால் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள படம் குறித்த தகவலும், அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே... அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக போனி கபூர் உறுதி செய்துள்ள நிலையில், இந்த படம் குறித்த வேற லெவல் தகவல் ஒன்று வெளியாகியுளளது.
அதாவது இந்த படத்தில், அஜித் முழுக்க முழுக்க நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரசிகர்கள் இப்போதே அடுத்த மங்காத்தாவை கொண்டாட தயாராகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.