இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், பாவாடை தாவணி கட்டிய பட்டாம் பூச்சியாய் நடித்திருந்த பூனம் பஜ்வாவா? இப்படி என... சமீப காலமாக கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறார்.
பார்ப்பதற்கு பாப்பியாக இருந்த இவருக்கு, மாடர்ன் கதாபாத்திரங்களை விட கிராமத்து வேடங்களே வரிசை கட்டியது. எனவே, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.
தற்போது இவரது கை வசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. எனவே தீவிரமாக பட வேட்டை நடத்தி வரும் இவர், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... படு மோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த அதிரி புதிரி ஹாட் புகைப்படங்களை பார்த்து, ஒரு தரப்பு ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். அதே போல் மற்றொரு தரப்பினர் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.