கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, தற்போது ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில், அன்பை பொழிந்த போட்டியாளர்கள் கடந்த சில வாரங்களாக கடும் சண்டை போட்டு கொண்டு இருப்பதையும், பீப் போடும் அளவிற்கு பேசுவதையும், வாய்ப்பேச்சு கை கலப்பு வரை செல்வது போல் நடந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.
எதற்கெடுத்தாலும், பாவணி மற்றும் அக்ஷரா கண்ணீர் சிந்தியே காரியம் சாதித்து வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதே போல் ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் கமல் கலந்து கொண்டு பேசும் நாளான இன்று, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள 7 நபர்களில் 3 பேர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இமான் அண்ணாச்சி, பாவணி, மற்றும் மதுமிதா ஆகியோர் தான் அந்த மூவர். இவர்களின் ஜெர்மனியை சேர்ந்த மாடலும், ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதா தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவலின் படி, இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறுவார் என நெட்டிசன்கள் கணித்திருந்தனர், ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இந்த வாரம் மதுமிதா தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.
நெட்டிசன்கள் கணிப்பின் படி, ஒவ்வொரு வாரமும் அவர்கள் எதிர்பார்த்த போட்டியாளர் இதுவரை வெளியேறியுள்ளதால்... இந்த முறையும் அப்படியே நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.