நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
அதே போல் இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே ரசிகர்கள் மனதில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது 'மகாநடி' திரைப்படம் தான். இந்த படத்தில் அச்சு அசல், நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது.
இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். பின்னர் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது தன்னுடைய பட பிடிப்பு பணிக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், கடல் அழகை ரசித்தபடி காபி குடிக்கும் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
துளியும் மேக்கப் போடாமல், தூங்கி எழுந்த முகத்தோடு, கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்த கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.