'சார்பட்டா பரம்பரை' படத்தில் மூலம், தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சஞ்சனா நடராஜன், கடந்த 2014 ஆம் ஆண்டு, வெளியான 'நெருங்கிவா முத்தமிடாதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இதை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதி சுற்று' படத்தில் பாக்சிங் மாணவிகளில் ஒருவராக நடித்தார்.
பின்னர் 'நோட்டா ', 2.0 போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு, நடிகை என்கிற அங்கீகாரத்தையும், இவரது முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் தெரிய வைத்தது சார்பட்டா பரம்பரை திரைப்படம் தான்.
மேலும் தனுஷ் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற, 'ஜகமே தந்திரம்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் சுமார் 7 வருட போராட்டத்திற்கு பின்பு அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக படமாக அமைந்துள்ளது 'சார்பட்டா பரம்பரை' படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த படத்தில் கலையரசனின் மனைவி லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சஞ்சனா.
அவ்வப்போது, கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பட வாய்ப்புக்கு கொக்கி போடுவதில் ஆர்வம் காட்டி வரும் சஞ்சனா... தற்போது தன்னுடைய தூக்கலான கிளாமரால் ரசிகர்களை திணற வைத்துள்ளார்.
குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது? என அனைவரும் வாய்பிளர்ந்து பார்க்கும் அளவிற்கு பிகினி உடையில் கூட புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.