தற்போது நடிகை சமந்தாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழஙகி வரும் நிகழ்ச்சியின் 'ஈவாரு மீலோ கோடீஸ்வரூலு' படப்பிடிப்பை முடித்த பிறகு சமந்தாவுக்கு நிகழ்ச்சியில் ஜெயித்த பணத்தின் கோசாலை வழங்கப்பட்டுள்ளது.
சமந்தா தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் வென்றுள்ளதால், சமந்தா மட்டும் இன்றி அவரது ரசிகர்களையும் இந்த தகவல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்த ஷோவை முடிந்த கையேடு, தான் பெற்ற பரிசு தொகையுடன்... சமந்தா தன்னுடைய மேலாளருடன் புகைப்படம் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
அக்டோபர் 15 ம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று சமந்தா கலந்து கொண்ட 'ஈவாரு மீலோ கோடீஸ்வரூலு' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சமந்தா மற்றும் ஜூனியர் என்டிஆர் தெலுங்கில் ஜனதா கேரேஜ், பிருந்தாவனம், ரபாசா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த வாரம், அக்டோபர் 2 அன்று, சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம், நாக சைதன்யா உடனான கணவன் - மனைவி உறவில் இருந்து பிரிந்து செல்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.