GDN Movie Day 1 Box Office Collection : மாதவன் நடிப்பில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஜிடிஎன் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தை (பயோபிக்) எடுப்பது எந்த ஒரு இயக்குநருக்கும் பெரிய சவால். அந்தப் படத்தில் வரும் நிஜ ஹீரோ வாழ்ந்த காலத்திற்கும், சூழலுக்கும் உண்மையாக இருக்கும்போதே, சினிமாவுக்கான சுவாரஸ்யத்தையும் சேர்த்து ரசிகர்களை ஈர்க்க வேண்டும். இந்த சவாலை மிகச் சரியாகக் கையாண்டு, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது கிருஷ்ணகுமார் எழுதி இயக்கியுள்ள 'GDN' திரைப்படம். நம் நாட்டில் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கியவர் என்று அறியப்படும் கோபால்சுவாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை போராட்டம்தான் இந்தப் படத்தின் கதைக்கரு.
மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஜி.டி.என் என்கிற கோபால்சுவாமி துரைசாமி நாயுடு, வாழ்க்கையில் வந்த தடைகளைத் தாண்டி எப்படி வெற்றி பெற்றார் என்பதை 'ஜி.டி.என்: எடிசன் ஆஃப் இந்தியா' படம் பேசுகிறது. அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான பல கண்டுபிடிப்புகளை இந்தியாவில் நிகழ்த்தியதால், கோபால்சுவாமி துரைசாமி நாயுடுவை 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கிறார்கள். அந்தப் பட்டத்திற்கு அவர் எவ்வளவு தகுதியானவர் என்பதைப் படத்தின் காட்சிகள் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. அதுமட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஆட்சியின் போதும், சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலக்கட்டத்திலும் ஒரு தொழிலதிபராக அதிகார வர்க்கத்துடன் ஜி.டி. நாயுடு எப்படிப் போராடினார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் 'ஜி.டி.என்' படம் விவரிக்கிறது.
35
ஜிடிஎன் விமர்சனம்
இந்தப் படத்தின் முதுகெலும்பே மாதவனின் நடிப்புதான். இளம் வயது துரைசாமியாக மாதவன் வரவில்லை. ஆனால், 30களின் இறுதியிலிருந்து 75 வயது வரையிலான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைத் திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இது தியேட்டரில் ஒரு ஆச்சரியமான அனுபவத்தைக் கொடுக்கிறது. நம்பி நாராயணனின் பயோபிக்கிற்குப் பிறகு, மாதவனின் சினிமா பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான மைல்கல். வெறும் தோற்றத்தில் மட்டுமல்லாமல், முகபாவனைகள், சின்னச் சின்ன உடல் அசைவுகள் மூலமாகக்கூட ஜி.டி. நாயுடுவை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மாதவன்.
கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டிய இன்னொரு கதாபாத்திரம், ஜெயராமுடையது. கிருஷ்ணன் என்ற வருமான வரித்துறை அதிகாரியாக அவர் வருகிறார். வெவ்வேறு வயதுகளில் வரும் கிருஷ்ணன் கதாபாத்திரத்தின் மாற்றங்களை, ஜெயராம் தனது உடல்மொழியிலேயே கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு வேகம் சேர்க்கும் மற்றொரு கதாபாத்திரம் சத்யராஜுடையது. துரைசாமியின் நெருங்கிய நண்பராக வரும் சத்யராஜின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. பிரியாமணி, வினய் ராய், துஷாரா விஜயன், கனிஹா, ஷீலா, கருணாகரன், டீஜே அருணாச்சலம், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஆடுகளம் நரேன், ஜானி விஜய், ஜான்சன் திவாகர், பிரிஜிடா சாகா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே தங்களது வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளது.
55
ஜிடிஎன் வசூல் நிலவரம் என்ன?
ஒரு பயோபிக் படத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில், இயக்குநர் மற்றும் கதாசிரியரான கிருஷ்ணகுமார் ராம்குமார் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் சோபிக்கவில்லை. லோகேஷ் கனகராஜின் டிசி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாள் உலகளவில் வெறும் ரூ.59 லட்சம் தான் வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு போட்டியாக வெளிவந்த லோகேஷின் டிசி திரைப்படம் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் ஜிடிஎன் படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.