Peddi
புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்த படம் பெத்தி. இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். மேலும் ஷிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் வருகிற ஜூலை 2ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
Super Sabbu
சந்தீப் கிஷன் நடித்துள்ள தெலுங்கு வெப் சீரிஸ் 'Super Sabbu'. ஒரு பழமைவாத கிராமத்தில் பாலியல் கல்வி அதிகாரியாக சந்தீப் கிஷன் வருகிறார். சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களது வாழ்க்கை எப்படி இணைகிறது என்பதுதான் கதை. இது ஜூலை 2ந் தேதி ரிலீஸ் ஆகும்.
Survival Of The Thickest – Season 3
இந்த காமெடி சீரிஸ் மூன்றாவது மற்றும் கடைசி சீசனுடன் வருகிறது. பணப் பரிசுக்காக போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் ஜாலியான உடல் மற்றும் மன ரீதியான சவால்களின் கதை தொடர்கிறது. இந்த வெப் தொடரும் ஜூலை 2ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
Human Vapor
ஜப்பானின் ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ் 'Human Vapor'. தன் உடலை வாயுவாக மாற்றி எந்தத் தடையையும் தாண்டும் ஒரு மர்ம நபர், தொடர் கொலைகள் செய்து போலீஸுக்கு சவால் விடுகிறார். இதுதான் படத்தின் மெயின் கதை. ஜூலை 2 முதல் பார்க்கலாம்.
Enola Holmes 3
மில்லி பாபி பிரவுன் மீண்டும் எனோலா ஹோம்ஸ் வேடத்தில் வருகிறார். இந்த முறை மால்டாவில் நடக்கும் ஒரு புதிய கேஸை விசாரிக்கும்போது, அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. ஜூலை 1 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.