'லியோ'வுக்குப் பிறகும் நடன அமைப்புப் பணிகளில் பிஸியாக இருந்தார். 'லியோவில் 'நா ரெடி', 'தங்கலான்', மலையாளத்தில் 'ஆவேஷம்', 'கூலி' படத்தில் 'மோனிகா' என பல ஹிட் பாடல்கள் சாண்டியுடையது. 'லியோ' கொடுத்த ரீச்தான் சாண்டியை 'லோகா'விலும் கொண்டு சேர்த்தது. 'லியோ' மற்றும் 'லோகா'வுக்குப் பிறகு, 'கிஷ்கிந்தாபுரி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் சாண்டி மாஸ்டர். ஹாரர் த்ரில்லராக வெளிவந்த இந்தப் படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இது உச்சகட்ட நடிப்பு என்றும், இனியும் சாண்டிக்கு இதுபோன்ற வேடங்கள் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். மலையாளம், தெலுங்கு அறிமுகங்களை 2025-ல் முடித்துவிட்ட நிலையில், தயாரிப்பில் உள்ள 'ரோஸி' சாண்டி மாஸ்டரின் கன்னட அறிமுகப் படமாகும். மலையாளத்தில் 'கத்தனார்' மற்றும் 'ப ப ப' படங்களிலும் சாண்டி இருக்கிறார். எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய ஆசை என்ற கேள்விக்கு, உச்சகட்ட வில்லன் அல்லது ஜாலியாக காமெடி செய்ய வேண்டும். நடுத்தரமான ரோல்கள் தனக்கு வேண்டாம் என்பதுதான் சாண்டி மாஸ்டரின் முடிவு.