மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அவர்களுக்கு இப்படத்தில் நடிக்க வழங்கப்பட்ட சம்பளம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கடைசியாக ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
விக்ரம்
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். இவர் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளிலேயே விக்ரமுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் கதையைப் பொருத்தவை ராஜ ராஜ சோழன் தான் ஹீரோ. அத்தகைய பவர்புல்லான வேடத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை. இப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடிக்க அவருக்கு ரூ.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.
கார்த்தி
பொன்னியின் செல்வனை இதற்கு முன் படமாக்க முயற்சித்தபோது எம்.ஜி.ஆர்., விஜய் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் என்றால் அது வந்தியத்தேவன் தான். தற்போது அந்த கேரக்டரில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் கார்த்திக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.