அமரன் முதல் ஜிக்ரா வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் படங்களின் லிஸ்ட் !

Published : Dec 06, 2024, 05:08 PM IST

இந்த வாரம் OTT தளங்களில் வெளியாகும் படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் இந்த படங்களை பார்க்கலாம்? முழு விவரம் இதோ..

PREV
15
அமரன் முதல் ஜிக்ரா வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் படங்களின் லிஸ்ட் !
Amaran

திரையரங்கில் ஒவ்வொரு வாரமும் புதிய படம் வெளியானாலும், OTT-யில் வெளியாகும் படங்களை பார்க்க தனி ரசிக பட்டாளமே உள்ளனர். திரையரங்குகளில் படம் பார்க்க நேரமில்லாதவர்கள் OTTயில் படம் பார்ப்பதையே விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்று பார்க்கலாம். 

அமரன் :

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வெளியான படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் நேற்று டிசம்பர் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. 

25
Matka

மட்கா : 

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ், மீனாட்சி சௌத்ரி இயக்கத்தில் வெளியான படம் மட்கா. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை கருணா குமார் இயக்கி உள்ளார். இந்த படம் நேற்று அமேசான் தளத்தில் வெளியானது. 

35
Sir Movie

சார் :

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி உள்ள படம் சார். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இதில் சாயா கண்ணன் என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் இன்று (டிசம்பர் 6) அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.

45
Jigra

ஜிக்ரா :

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜிக்ரா. வேதாங் ரெய்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை வாசன் பாலா இயக்கி உள்ளார். ஆக்ஷன் த்ரில்ல படமாக உருவாகி உள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 6) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

 

55
Little Hearts

லிட்டில் ஹார்ட்ஸ்

அபி டிரீசா, ஆண்டோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் லிட்டில் ஹார்ட்ஸ். ஷேன் நிகம், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை சாண்ட்ரோ தாமஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நகைச்சுவை – காதல் படமாக உருவாகி உள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 6) டெண்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 

click me!

Recommended Stories