நடிகர்கள் விமல், சூரி தடையை மீறி ஜாலி ட்ரிப் அடிக்க உதவியதாக 3 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்...!!

First Published Jul 24, 2020, 12:36 PM IST


நடிகர்கள் விமல், பரோட்டா சூரி உள்ளிட்டோர் பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன்பிடித்த விவகாரம் தொடர்பாக 3 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல கடந்த பிப்ரவரி மாதம் முதலே பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகேயுள்ள வனத்துறைக்கு சொந்தமான விடுதியில் தங்க சிறப்பு அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
undefined
இந்நிலையில் ஏரிக்கு அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்
undefined
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் கடந்த 18ம் தேதி பேரிஜம் ஏரியில் அத்துமீறி சூரி, விமல் உள்ளிட்ட நான்கு பேர் மீன் பிடித்ததும், அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததும் தெரியவந்தது.
undefined
சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை சரக கண்காணிப்பாளர் தேஜஸ்வி, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
undefined
விமல், சூரி அத்துமீறி நுழைந்தது குறித்தும் வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
undefined
நடிகர்கள் முறையாக இ பாஸ் பெற்று தான் வந்தனரா என்பது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
undefined
இந்நிலையில் நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வேட்டை தடுப்பு காவலர்கள் மூன்று பேரை வனத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
undefined
click me!