தஞ்சாவூர் ஆண்களை அவமதித்த வனிதா... சொந்த ஊர்காரங்கள தப்பா பேசவில்லை என அதிரடி விளக்கம்...!

First Published Jul 24, 2020, 12:08 PM IST

தஞ்சாவூர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் அனைவரும் கருத்து கூறி வருகின்றனர். சோசியல் மீடியா முழுவதும் தனது பிரச்சனை குறித்தே விவாதிக்கப்படுவதால் ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில் வனிதா விஜயகுமார் வெளியிட்ட வீடியோ ஒன்றில் “எங்க ஊர் தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது இயல்பு. ஏன் என் அப்பா விஜயகுமார் கூட இரண்டு திருமணங்கள் செய்தவர் தான்” என்று தெரிவித்திருந்தார்.
undefined
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவ ஆரம்பித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்திலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் பாஜகவினரும் வனிதா மீது புகார் கொடுத்தனர்.
undefined
அதுமட்டுமின்றி யாரோ ஒரு சிலர் இரண்டு திருமணம் செய்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தஞ்சை ஆண்களையே அவமதிக்கும் விதமாக பேசியதாக வனிதாவிற்கு கண்டனங்கள் குவிய ஆரம்பித்தது.
undefined
தஞ்சை மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்களையும், பெண்களையும் தரகுறைவாக விமர்சித்து உள்ளதாகவும், உடனடியாக அவர் இது குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
undefined
இதையடுத்து மீண்டும் ட்விட்டரில் ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா, தஞ்சாவூர் என்னுடைய சொந்த ஊர், அந்த ஊரின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து நான் பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
undefined
அதுமட்டுமின்றி என்னுடைய குடும்பமாக இருக்கும் மக்களை காயப்படுத்தும் வகையில் பேசும் எண்ணம் இல்லை. ஆண்கள் எப்போதும் அவர்களுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்வார்கள். கடமையை பொறுப்பாக நிறைவேற்றுவார்கள் என்று பெருமையாக தான் கூறினேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
undefined
மேலும் தஞ்சாவூரைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய கோபமான குரலால் உங்களை அவமானப்படுத்திவிட்டேன் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். என்றென்றும் என் தஞ்சை மண்ணுத் தலை வணங்குகிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
undefined
click me!