தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் வெளியான “வெய்யோன் சில்லி”, ”மண் உருண்டை” ஆகிய பாடங்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இடையே காதல் மலர்ந்தது.
இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி கடந்த மாதம் 19ம் தேதி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி தங்களது மகளுக்கு “அன்வி” என பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறக்கும் வரை கர்ப்பமாக இருந்த விஷயத்தை ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தனர்.
குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன பிறகே சைந்தவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
தற்போது சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மொட்டை மாடியில் ஸ்விங் அணிந்து படி குழந்தையை தூக்கி வைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் இரவு நேரத்தில் குழந்தை அழும் போது ஸ்விங் அணிந்து சமாதானப்படுத்தினால் உடனே தூக்கிவிடுவதாகவும், இதனால் முதுகு வலி ஏற்படாது என்றும் புதிதாக தாயான இளம் தாய்மார்களுக்கு அசத்தலான டிப்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.