“காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

First Published | Aug 16, 2020, 12:31 PM IST

சூர்யாவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த “காக்க, காக்க” படத்தில் முதலில் கெளதம் மேனன் யாரை எல்லாம் நடிக்க வைக்க முயன்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யாவிற்கு கோலிவுட்டில் அசத்தலான ஓபனிங்கை கொடுத்த திரைப்படம் காக்க, காக்க. அப்போது தான் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த சூர்யாவிற்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
2001-ம் ஆண்டில் வெளியான 'மின்னலே' மிகப் பெரிய வெற்றிபெற்று தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனனின் இரண்டாம் படம் 'காக்க காக்க'.
Tap to resize

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அன்புச்செல்வன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் சூப்பராக பொருந்தி போனர் சூர்யா. இந்த படத்திற்காக தனது உடலமைப்பு மற்றும் பாடி லாக்குவேஜ் என நிறையவே மெனக்கெட்டார்.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட்டடித்த இந்த திரைப்படம் சூர்யா, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகிய இரண்டு பேருக்கும் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தின் மூலமாக சூர்யா - ஜோதிகா இடையிலான காதல் கெமிஸ்ட்ரி அளவு கடந்து ஒர்க் அவுட் ஆனது. இந்த ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது.
இப்படிப்பட்ட இந்த படத்தின் கதையை கெளதம் வாசுதேவ் மேனன் முதலில் கூறியது ஜோதிகாவிடம் தானாம். அதேபோல் அவர் முதலில் ஹீரோவாக நடிக்க வைக்கவிருந்ததும் சூர்யாவை கிடையதாம்.
காக்க காக்க பட கதையை கேட்ட ஜோதிகா, இதில் அஜித் அல்லது விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதையடுத்து அஜித், விக்ரமிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார் கெளதம். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் நடிக்க முடியாமல் போகவே, அந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்ததாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!