முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அரசியலுக்கு வரலாமா, வரக்கூடாத என இரட்டை மனதுடன் இருந்த ரஜினி, கமல் ஆகியோர் அதிரடியாக தங்களுடைய அரசியல் வருகை குறித்து தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் குறித்து அறிவித்த வேகத்தில், மக்காவை தேர்தலில் போட்டியிட்டு, குறிப்பிட்ட தக்க வாக்குகளை பெற்று, மக்களின் நம்பிக்கையை பெற்றார்.
இதை தொடர்ந்து ரஜினி அரசியல் கட்சி தற்போது வரை துவங்க வில்லை என்றாலும், ஆன்மீக அரசியலுக்கு அச்சாரம் போடும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில், கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமலை தொடர்ந்து... தன்னுடைய படங்கள் மூலமும், ஆடியோ லான்ச் விழாக்களிலும் அதிகமாக அரசியல் பேசி வந்த தளபதி விஜய், அடுத்ததாக அரசியல் கட்சி துவங்க அவரச அவரசமாக தன்னுடைய தந்தை மூலம் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக, படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் தளபதியும், அவருடைய தந்தையும்.. அதி தீவிரமாக அரசியல் கட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசித்து வந்ததை தொடர்ந்து, தன்னுடைய வீட்டில்... எஸ்.ஏ.சி, டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளாராம்.
இந்த வழக்கறிஞர் தான் கன்னடம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் அரசியலுக்கு தயாரான பலருக்கு இவர் தான் திறம்பட அவர்களுடைய கட்சியை பதிவு செய்து கொடுத்தவராம். ஆரம்பத்தில் ரஜினிக்கு கூட இவர் தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தெரிய வரும் அது வரை கார்த்திருப்போம்..