ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த டாப் இயக்குனர்கள்..!

First Published Jul 9, 2020, 12:58 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 500 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இதில் பல இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரின் படமும் ரசிகர்களை ஈர்த்து விடுவது இல்லை. மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் இயக்குனராக களமிறங்கும் சிலர் தங்களுடைய முதல் படத்திலே திறமையை நிரூபித்து, முன்னணி இயக்குனர்களாக உயர்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு.
 

பா.ரஞ்சித்சி.வி.குமார், தயாரிப்பில் தினேஷ் ஹீரோவாக நடித்து... கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக வெளியான திரைப்படம் 'அட்ட கத்தி'. அனைவரும் சாதாரணமாக, வாழ்க்கையில் மேற்கொள்ளும் பிரச்சனைகளை இந்த படத்தில் காட்டி இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
காக்கா முட்டை:இயக்குனர் மணிகண்டன், மிகவும் எதார்த்தமான மக்களின் வாழ்க்கையையும், இரண்டு சிறியவர்கள் ஆசையை பற்றியும் எடுத்திருந்த திரைப்படம் 'காக்கா முட்டை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருந்த இந்த படம் தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
undefined
ராஜா ராணி:இயக்குனர் அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'ராஜா ராணி'. மௌன ராகம் படத்தின் ரீமேக் போல் இந்த படம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
undefined
லோகேஷ் கனகராஜ்:'மாநகரம்' படத்தை இயக்கி... ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தளபதியை வைத்து இவர் இயக்கியுள்ள 'மாஸ்டர்' படத்திற்காக விஜய் ஃபேன்ஸ் வெறித்தனமாக வெயிட்டிங்.
undefined
துருவங்கள் 16 :கார்த்திக் நரேனை இயக்குனராக அறிமுகப்படுத்திய திரைப்படம் 'துருவங்கள் 16'. 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தை நரேன் என்பவர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் நடிகர் ரகுமானுக்கு சூப்பர் - டூப்பர் ரீ-என்ட்ரி திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
undefined
சதுரங்க வீட்டை:நடிகர் மனோபாலா தயாரிப்பில், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை, மூட நம்பிக்கை, அதிர்ஷ்டம் போன்றவற்றை மையமாக வைத்து எடுத்த இந்த படத்தில், பிரபல ஒளிப்பதிவாவளர் நட்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் எச்.வினோத். தற்போது தல நடித்து வரும் 'வலிமை' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
அருவி:இயக்குனர் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அருவி' பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வரும், நாயகி பற்றிய கதை தான் அருவி. இந்த திரைப்படத்தை, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படம், அருண் புருஷோத்தமனுக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்தது.
undefined
குக்கூ:இயக்குனர் ராஜ் முருகன் இயக்கத்தில், கண் தெரியாத இருவரின் அழகிய காதலை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்த திரைப்படம், 'குக்கூ' . 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், தினேஷ் ஹீரோவாகவும், மாளவிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.
undefined
பரியேறும் பெருமாள்:இயக்குனர் மாறி செல்வராஜ், இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. குறிப்பிட்ட சமூக மக்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கதிர் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை, இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார்.
undefined
கோலமாவு கோகிலா:இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த இந்த படத்தை, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது.
undefined
LKGஅரசியல், காமெடி படமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை கே.ஆர்.பிரபு என்பவர் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்த படத்தில், ஆர்.ஜே .பாலாஜி கதாநாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
undefined
கோமாளி:பல குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை வைத்து, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் கோமாளி. நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை, ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பிரதீப் ரங்கநாதனை சிறந்த இயக்குனராக அறியச்செய்தது.
undefined
click me!