நயன்தாரா லவ்வரால் பெயரை கெடுத்துக் கொண்ட அஞ்சலி... வைரல் வீடியோவை பார்த்து வயிறெரியும் ரசிகர்கள்...!

First Published | Dec 4, 2020, 5:57 PM IST

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஞ்சலி வித்தியாசமான கதபாத்திரத்தில் நடிக்கிறார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் வைரல் டிரெய்லரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புதுக்காலை ஆந்தாலஜி படத்தை தொடர்ந்து, தற்போது நெட் பிளிக்ஸில் பாவக் கதைகள் என்ற பெயரில் ஆந்தாலஜி படம் தயாராகியுள்ளது.
ரோனி ஸ்க்ரூவலாவின் ஆஎஸ்விபி மூவிஸ் நிறுவனமும், பிளையிங் யுனிகார்ன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இந்த படத்தை நெட்பிளிக்ஸ் 190 நாடுகளில் வெளியிட உள்ளது. காதல், அந்தஸ்து, கவுரம் ஆகியவை உறவுகளுக்கிடையே ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த 4 அழகான கதைகள் கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
Tap to resize

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான அஞ்சலி, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள கதையில் நடித்துள்ளார். பக்கத்து வீட்டு பெண் போன்ற பாந்தமான அழகால் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த படத்தில் அஞ்சலி, கல்கி கோச்சலின் ஆகிய இருவரும் லெஸ்பியன் உறவில் இருப்பதும், அவர்களின் உறவுக்கு அஞ்சலியின் அப்பா எதிர்ப்பு தெரிவிப்பது தான் கதை என்பது டிரெய்லர் மூலமாக தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில் இடம் பிடித்துள்ள 4 கதைகளுமே செல்லமாக வளர்த்த தங்களது மகள்களை அவர்களுடைய அப்பாக்களே ஆணவக் கொலை செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரைகுறை ஆடையில் படுக்கையில் சக தோழியுடன் இருப்பது போன்றும், கல்கி கோச்சலினுக்கு லிப் - லாக் கொடுப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!