விஜய் டிவியில், எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும்... கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
பிக்பாஸ் முதல் சீசன், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆரம்பம் ஆனாலும், தன்னுடைய புத்திசாலித்தனமான பேச்சு மற்றும் போட்டியாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் கையாள வேண்டும் என்பதை கச்சிதமாக செய்து, இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பை கூட செய்தவர் நடிகர் கமலஹாசன்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வந்தது. கொரோனா முதல் அலை, மற்றும் இரண்டாவது அலை காரணமாக துவங்குவது சற்று தாமதமானாலும், ஒருவழியாக தற்போது பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் நாளை பிக்பாஸ் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த ப்ரோமோ நேற்று வெளியான நிலையில், தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதே சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பட்டிமன்றம் போல் பேசப்பட்டு வருகிறது.
bb5
ஏற்கனவே ஷகிலாவின் மகள் மிளா, சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர், கனி, சுனிதா, உள்ளிட்ட சில பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டு வரும் நிலையில், தற்போது பிரபல வாரிசு நடிகர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் நடிகர் திலகம் சாவித்திரி ஆகியோரின் பேரன் அபிநய் பெயர் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாராம்.
இவர் கணித மேதை ராமானுஜர் உடைய பயோபிக் படமான ராமானுஜர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் சென்னை 28, பரமபத விளையாட்டு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவருக்கு திரையுலகில் சரியான பிரேக் கிடைக்கவில்லை. எனவே பிரபலங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்வு செய்து வரும் நிலையில், ஐவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல தயாராக உள்ளார். இதுகுறித்த தகவல் உறுதி ஆகி விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.