பைக்கில் உலகையே சுற்ற பக்கா பிளான் போடும் அஜித்..!! வைரலாகும் புகைப்படம்..!!

First Published | Sep 21, 2021, 11:01 AM IST

தல அஜித் தற்போது உலகையே பைக்கில் சுற்றி வர பிளான் போட்டு, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தல அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது, அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீப காலமாகவே, ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார்.

Tap to resize

மூன்று நாட்களுக்கு முன் டெல்லி சென்ற அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்துள்ளார் அஜித். இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

பைக்கில் 7 continents, 64 countries -சை சுத்தி வந்த மாரல் யாசர்லூ என்கிற சாகச பெண்ணை தல அஜித் சந்தித்துள்ளார். அவரிடம் பைக்கில் டிராவல் செஞ்ச அனுபவங்கள் பத்தியும் விவரமாக கேட்டு தெரிந்து கொண்டதாக  அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவே கன்பார்ம் செய்துள்ளார்.

மேலும் தன்னோட ட்விட்டர் பக்கத்தில் அஜித் அண்ட் மாரல் யாசர்லூ  மீட்டிங் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ள சுரேஷ் சந்திரா, டெல்லியில் மாரல் யாசர்லூவை மீட் பண்ண தல அஜித், வரும் காலத்தில்  தன்னோட பைக்கில் உலகம் சுற்றும் பிளானை எக்ஸிக்யூட் பண்ணுவதை அவரிடம் நிறைய அறிவுரைகளை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் பதிவு வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!