கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றில் இவர்ந்து மக்களை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகள், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு வந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதால் பொதுமக்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, பலர் நலமடைந்தாலும், அதில் ஒரு சிலர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு ஆகியோர் துடு உயிரிழத்த நிலையில் தற்போது மேலும் ஒரு இயக்குனரும் கொரோனாவால் பலியாகியுள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இயக்குநர் கேஎஸ் ரவிகுமாரிடம், உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர், 'கண்ணுக்கு கண்ணாக' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியவர் தயாளன். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு அடுத்தடுத்து பலர் பலியாகி வருவது தமிழ் திரையுலகினரை வேதனையடைய வைத்துள்ளது.