கொரோனா தடுப்பு பணியில் கெத்தாக களமிறங்கிய... அஜித்தின் 'தக்‌ஷா' டீம்..! வெளியான சூப்பர் தகவல்...

First Published | May 8, 2021, 7:46 PM IST

நடிகர் அஜீத்தின் மேற்பார்வையில் இயங்குவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்று இயங்கிவரும் தக்‌ஷா குழுவினர் தற்போது கொரோனா தடுப்பு களப்பணியில் இறங்கியுள்ள தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 
 

நடிப்பு , கார்,பைக் ரேஸ், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என பல்வேறு திறமைகளோடு வலம் வரும் அஜீ,த் சமீபகாலமாக சமூக செயல்பாடுகள் சிலவற்றிலும் அக்கறை காட்டிவருகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர். இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.
Tap to resize

ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கை தேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்‌ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்‌ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தி பரிசை தட்டி சென்றது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்‌ஷா குழு பங்கேற்றது. அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுமக்களை அச்சுறுத்த துவங்கிய கொரோனா வைரஸ் சற்று தணிந்த நிலையில், மீண்டும் தன்னுடைய இரண்டாவது அலையை துவங்கி மக்களை அலைக்கழித்து வருகிறது.
எனவே அஜித்தின் 'தக்‌ஷா' டீம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த டீம் சையது வரும் பணிகளுக்கு, அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

Latest Videos

click me!