லிங்குசாமி படத்தின் படப்பிடிப்புக்கு பிறந்தநாளில் திடீர் விசிட் அடித்த பிரபலம்! கேக் வெட்டி ஜமாய்த்த படக்குழு!

First Published | Jul 18, 2021, 12:59 PM IST

இயக்குனர் லிங்குசாமி, 'சண்டக்கோழி' படத்தை தொடர்ந்து, இயக்கி வரும், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், திடீர் என இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிரபலம் ஒருவர் வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் 'உப்பென்ன' பட நாயகி கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆதி பின்னிஷெட்டி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Tap to resize

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி... தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு, இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீர் என வருகை தந்தார். படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் லிங்குசாமியையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் நேற்று, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்த நாள் என்பதால் #RAP019 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!