பாக்கிய லட்சுமி நடிகையின் தந்தையும்..பிரபல நடன இயக்குனருமான சின்னா காலமானார்

Kanmani P   | Asianet News
Published : Jun 16, 2022, 08:08 PM ISTUpdated : Jun 16, 2022, 08:19 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி  நாடகத்தின் மூலம் பிரபலமான ஜெனிஃபரின் தந்தையும் பிரபல நடன இயக்குனருமான சின்னா உடல்நல குறைவால் இன்று காலமானார்.

PREV
13
பாக்கிய லட்சுமி நடிகையின் தந்தையும்..பிரபல நடன இயக்குனருமான சின்னா காலமானார்
choreographer Chinna has passed away

 புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிஃபரின் தந்தை சின்னா. பிரபல நடன இயக்குநராக பணியாற்றிய சின்னா உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. இது குறித்து ஜெனிஃபர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

23
famous choreographer Chinna has passed away

ஆந்திர மாநிலம், ஜங்கா ரெட்டி கூடத்தை சேர்ந்த இவர் சேஷூ மாஸ்டரிடம் உதவியாளனாக பணியாற்றிவர். பின்னர் இயக்குநர் பாக்யராஜ்  படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார்.  ‘’தூறல் நின்னு போச்சு’’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ’டார்லிங் டார்லிங் டார்லிங்’, முந்தானை முடிச்சு,  ‘தாவணிக்கனவுகள்’ படத்திற்கும்  நடன இயக்குநராக பணியாற்றினார்.

33
choreographer Chinna has passed away

மேலும் ‘வாங்க மச்சான் வாங்க’, ‘உன்னை விட மாட்டேன்’, ஆர்.சுந்தர ராஜனின் இயக்கத்தில் ‘என்னைத் தெரிஞ்சா சொல்லாதீங்க’ போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார். 300 படங்களுக்கும் மேல் நடனக் குழுவில் உதவியாளராக இருந்து நடன அமைப்புகளும் செய்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!

Recommended Stories