புஷ்பா நாயகனை புக் செய்த லோகேஷ் கனகராஜ்?..டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் விக்ரம் டைரக்டர்!

Kanmani P   | Asianet News
Published : Jun 16, 2022, 07:33 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை பிரபாஸ் , ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை அணுகி இறுதியாக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார்.

PREV
14
புஷ்பா நாயகனை புக் செய்த லோகேஷ் கனகராஜ்?..டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் விக்ரம் டைரக்டர்!
Lokesh Kanagaraj

சமீபத்திய அறிக்கையின்படி, ' விக்ரம் ' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டோலிவுட் அறிமுகத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது ஸ்கிரிப்ட்களை இரண்டு தெலுங்கு நடிகர்களுக்கு விவரித்ததாகவும் பின்னர் ' புஷ்பா ' நடிகர் அல்லு அர்ஜுன் லோகேஷ் கதையில் சம்மதம் தெரிவிக்கவும் கூறப்படுகிறது.

24
lokesh kanagaraj, allu arjun

கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் தனது ஸ்கிரிப்டுடன் இதுவரை பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை அணுகி இறுதியாக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார். புஷ்பா நடிகர் தனது 'புஷ்பா 2' முடிந்ததும் அவருடன் பணியாற்றுவார் என்றும் திறமையான கோலிவுட் இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

34
lokesh kanagaraj

ஒரு பிரபலமான தமிழ் தயாரிப்பு நிறுவனம் இந்த திட்டத்தை ஒரு பான்-இந்திய திரைப்படமாக தயாரிக்கும் என்றும் மேலும் சிலரும் படத்திற்கு நிதியளிப்பதற்காக திட்டத்தில் பங்குதாரர்களாக சேர ஆர்வமாக உள்ளனர் என்றும் வதந்தி பரவியுள்ளது. லோகேஷ் சமீபத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பாராட்டு பெற்றார். மேலும் 'ஆர்ஆர்ஆர்' நடிகர் ராம் சரண் லோகேஷுக்கு  ஒரு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. 

 

44
rajini, lokesh kanagaraj

விக்ரம் இயக்குனர் தனது படத்தின் வெற்றியை அனுபவிக்கும் தருணத்தில் தற்போது உள்ளார். இது அனைத்து மொழி பதிப்புகளிலிருந்தும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரஜினியுடன் ஓர் பமமும், கைதி 2, சூர்யாவுடன் ஒரு படம் என அடுத்தடுத்த திட்டங்களை தன் கைவசம் வைத்துள்ளார் லோகேஷ். 

Read more Photos on
click me!

Recommended Stories