பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'.
படிக்கும் வெண்ணிலாவின் ஆசையை புரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு தந்தை ஏற்பாடு செய்வதால், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியையின் உதவியுடன் படிக்க நினைக்கிறார். இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்கள் இவை அனைத்தையும் கடந்து எப்படி கல்லூரியில் சேர்கிறாள் வெண்ணிலா, கல்லூரியில் தாளாளரான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது என்பது சுவாரஸ்யமாக எடுத்து செல்கின்றனர்.
வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஹீரோவாக, ஏற்கனவே அரண்மனை கிளி சீரியலில் நடித்த சூர்யா தர்ஷன் நடித்து வருகிறார்.
kaatrukkenna veli
மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில், ஜனனி அசோக் குமார், ஸ்ரீதேவி அசோக், மானெஸ் சாவளி, மாளவிகா அவினாஷ், மதன், ஷ்யாம் சுந்தர் என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி பேசும் இந்த விறுவிறுப்பான தொடரில் இருந்து தற்போது முக்கிய நடிகை ஒருவர் விளங்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
kaatrukkenna veli
இந்த சீரியலில் பல புதுமுகங்கள், மற்றும் ஏற்கனவே சீரியலில் நாம் பலரை பார்த்திருந்தாலும், திரைப்படங்களிலும் பார்த்த முகமாக இருந்தவர் நடிகை மாளவிகா, சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தற்போது திடீர் என 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் இருந்து அவர் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு பதில் யார் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.