திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல குடும்பத்து மருமகளாகவே இருந்தாலும், சமந்தா சினிமாவை விட்டு விலகாமல் சரியான கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார்.
சமந்தாவின் கைவசம் சாகுந்தலம் என்ற தெலுங்கு படமும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் மட்டுமே இருந்த நிலையில், இவ்விரு படங்களையும் நடித்து முடித்து விட்டார்.
சில இயக்குனர்கள் இவரை தேடி வந்து கதை கூறிய போதும், எந்த படங்களுக்கும் தற்போது வரை கால் சீட் கொடுக்காமல் உள்ளார். சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுக்கலாம் என இவர் பேசிய பேட்டி ஒன்றும் வைரலானது. இருப்பினும் அடுத்ததாக சில படங்களில் நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.
மற்றொரு புறம் இவரது விவாகரத்து குறித்த தகவல் வதந்தியா? என பல ரசிகர்கள் கேட்டும் இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் சமந்தா தற்போது கலக்கலான சோலி உடையில் செம்ம கூலாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் லைட் கலர் பிங்க் சோலியில்... மூக்கிற்கு நடுவே வித்தியாசமான மூக்குத்தி அனைத்து, உச்சி மண்டையில் கொண்டையோடு வித்தியாசமான கெட்டப்பில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.