துளியும் மேக்அப் போடாமல்... காட்டன் சேலையை காற்றில் பறக்க விட்டு புன்னகை பூவாய் போஸ் கொடுத்த சாய் பல்லவி!!

First Published | Sep 4, 2021, 1:29 PM IST

நடிகை சாய் பல்லவி சிம்பிள் காட்டன் சேலையில், முகம் சிவந்த புன்னகையோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 
 

ஒரே ஒரு படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது எல்லாம் அனைவருக்கும் சாத்தியமாகாது. ஆனால் சாய் பல்லவி தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மாநில ரசிகர்களின் மனதையும் ஒரே படத்தில் கொக்கிப் போட்டு கவர்ந்திழுத்தார். 
 

Tap to resize

தமிழில் சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார். 
 

கண்டமேனிக்கு தன்னை தேடி வரும், அனைத்து கதைகளிலும் நடிக்காமல், தன்னைக்கு எப்படி பட்ட கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும், என்பதை தேர்வு செய்து நடித்து அசத்தி வருவது தான் சாய் பல்லவியின் பலம் என்று கூறலாம்.
 

sai pallavi

மாடர்ன் பெண்ணாக நடித்தால் தான், திரையுலகைள ஜெயிக்க முடியும் என நிலைக்கு சில நடிகைகளின் கண்ணோட்டத்தையும் மாற்றியது, சாய் பல்லவியின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.
 

sai pallavi

தற்போது சாய் பல்லவி, துளியும் மேக்அப் இல்லமா அழகிய ஆரஞ்சு கலர், சேலையில... வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போ ரசிகர்கள் மத்தியில லைக்குகளை குவிச்சிக்கிட்டு வருது.

sai pallavi

அதுலயும், சேலைய காற்றுள்ள பறக்க விட்டு, ரசிகர்கள் மனசையே சாய் பல்லவி இந்த லேட்டஸ்ட் புகைப்படதுல அள்ளிட்டாங்கனு தான் சொல்லணும்.

Latest Videos

click me!