பெரிய நடிகர்களின் சம்பளத்தை குறைத்தால் தான் படம் ஓடும்..கரார் காட்டும் உதயநிதி

Kanmani P   | Asianet News
Published : May 23, 2022, 01:11 PM ISTUpdated : May 23, 2022, 01:13 PM IST

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் சம்பள விவரம் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசியுள்ள உதயநிதி, சம்பள உயர்வால் தான் படங்கள் ஓடுவதில்லை என கூறியுள்ளார்.

PREV
15
பெரிய நடிகர்களின் சம்பளத்தை குறைத்தால் தான் படம் ஓடும்..கரார் காட்டும்  உதயநிதி
udhayanidhi

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், 2-வதாக இயக்கி உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்உதயநிதி  போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

25
nenjukku needhi

உதயநிதி சட்டமன்ற உறுப்பினரான பிறகு முதல் முறையாக வெளியான இந்த படமா குருதிஹா மிகுந்த எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. இந்த படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

35
nenjukku nidhi

கூட்டம் அதிகளவு இருந்த போதிலும் இப்படம் முதல் நாளில் ரூ.1.30 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படம்  இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆர்ட்டிகிள் 15 என்கிற படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தை முன்னதாக பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி இருந்தார்.

45
udhaya nidhi

இதற்கிடையே பெரிய ஹீரோக்களின் படங்களை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் திரையிட்டு வரும் உதயநிதி, பெரிய ஹீரோக்கள் பற்றி பேசியிருந்தது வைரலாகி வருகிறது. நெஞ்சுக்கு நீதி படம் குறித்தது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய உதயநிதி, பெரிய நடிகர்களின் சம்பளத்தை குறைத்தால் தான் படம் ஓடும் என கூறியுள்ளார்.

55
beast

முன்னதாக விஜய் பீஸ்ட் படத்திற்கு 105 கோடி சம்பளம் பெற்றதாகவும், அஜித்தும் அதிக சம்பளம் பெறுவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் கேஜிஎப் நயனின் சம்பளத்தை ஒப்பிட்ட உதயநிதி சம்பளத்தை குறைத்து மேக்கிங்கிற்கு அதிக பணம் செலவிட்ட காரணத்தால் தான் படம் ஹிட் கொடுத்தது. அது போல இங்குள்ள பிரபலங்களின் படங்களிலும் கடைபிடித்தால் படம் நல்ல ஹிட் அடிக்கும் என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories