எம்.ஜி.ஆர் உடன் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா... வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...!

Published : Sep 22, 2020, 08:13 PM IST

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., ஜெயசங்கருடன் நடித்த பழம் பெரும் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

PREV
17
எம்.ஜி.ஆர் உடன் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா... வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...!

கொரோனா தொற்றால் பாலிவுட் பிரபலங்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமிதாப் பச்சனின் குடும்பத்தை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று, தற்போது போனிகபூர் குடும்பத்தை சூழ்ந்துள்ளது. 

27

ஏற்கனவே அவருடைய வீட்டில் பணியாற்றிய 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து போனிகபூரும், அவருடைய மகள்களும் தனிமைப்படுத்திக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. 

37

ஆனால் தற்போது போனி கபூருக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த மகனும், பிரபல நடிகருமான அர்ஜுன் கபூருக்கும், அவருடைய காதலி மலைக்கா அரோரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

47

தற்போது பிரபல இந்தி நடிகையான ஜரினா வஹாப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழில் எம்.ஜி.ஆர். உடன் நவரத்தினம், ஜெயசங்கர் உடன் கைவரிசை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

57

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான அதித்யா பஞ்சோலியை மணந்த ஜரினா வஹாப்புக்கு,  சூரஜ் பஞ்சோலி என்ற மகனும்,  சனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் பாலிவுட்டில் சினிமாவில் நடித்து வருகின்றனர். 

67

நடிகை ஜரினா வஹாப்புக்கு திடீரென மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

77

இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

click me!

Recommended Stories