மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி திரைக்கு வந்தது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். மேலும் இதுதான் தன்னுடைய கடைசி படம் என உதயநிதி அறிவித்ததால், இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல்வேறு திறமை வாய்ந்த முன்னணி நடிகர், நடிகைகளை நடிக்க வைத்திருந்தனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்து இருந்தது.
மாமன்னன் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வடிவேலுவின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.72 கோடி வசூலித்து இருந்தது. இதையடுத்து அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் வெளியானது. மாமன்னன் படத்தை கடந்த ஜூலை 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டு இருந்தது.
ஓடிடியில் ரிலீஸ் ஆனது முதல் மாமன்னன் திரைப்படம் வேறுவிதத்தில் டிரெண்டாக தொடங்கியது. இப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் கேரக்டரை ஹீரோ போல் சித்தரித்து ஏராளமான மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. எந்த பாடல் போட்டாலும் செட் ஆகும் விதமாக பகத் பாசிலின் வீடியோ அமைந்திருந்ததால், விதவிதமான பாடல்களை போட்டு எடிட் செய்து மீம் கிரியேட்டர்கள் இணையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மாமன்னன் ‘ரத்னவேலு’ பகத் பாசிலை கொண்டாடுபவர்கள்... சாதிய மனநோயாளிகள் - சவுக்கடி கொடுத்த வன்னிஅரசு
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த வீடியோவை பல்வேறு சாதியினரும் தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களை போட்டு வைரலாக்கியது தான். இதனால் இந்த வீடியோ சாதி வெறியை தூண்டும் விதமாக உள்ளதாக ஒருபக்கம் எதிர்ப்பு கிளம்பியதால், இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜோ, நடிகர் உதயநிதி ஸ்டாலினோ எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் கப்சிப்னு இருக்கும் நிலையில், தற்போது பகத் பாசில் சைல்ண்டாக ரியாக்ட் செய்துள்ளார்.