Fact Check: புஷ்பா 2 வுக்கு எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பெஷல் லைக் பட்டன்!

Published : Dec 05, 2024, 08:33 PM IST

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிறப்பு ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன. #Pushpa2TheRule, #AlluArjun போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும் போது புஷ்பா ஈமோஜி தோன்றும்.

PREV
16
Fact Check: புஷ்பா 2 வுக்கு எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பெஷல் லைக் பட்டன்!
Pushpa 2 Like Button

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிறப்பு ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன. #Pushpa2TheRule, #AlluArjun போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும் போது புஷ்பா ஈமோஜி தோன்றும்.

26
Pushpa 2 Special Like Button on X

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'புஷ்பா 2' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வந்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.

36
Pushpa 2 Box Office

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்ப ராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா கலக்கி இருக்கிறார். தனஞ்சயா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் பலர் புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளனர்.

46
Pushpa 2 The Rule

இந்நிலையில் புதன்கிழமை படத்தின் ரிலீசை முன்னிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் சிறப்பு ஸ்டிக்கர்கள் வெளியானது. எக்ஸ் பயனர்கள் #Pushpa2TheRule, #Pushpa2, #AlluArjun, #AssaluThaggedheLe, #WildFirePushpa போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும் போது புஷ்பா அல்லு அர்ஜுன் ஈமோஜி அருகில் தோன்றுவதைப் பார்க்கலாம்.

56
Pushpa 2 Collection

எக்ஸ் தளத்தில் புஷ்பா 2 படத்துக்கு கிடைத்த இந்த சிறப்பு எமோஜியால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே, எலான் மஸ்க் புஷ்பா 2 படம்பிடித்துப் போனதால்தான் எக்ஸ் தளத்தில் புஷ்பா படம் பற்றிய பதிவுகளுக்கு சிறப்பு லைக் பட்டம் அறிமுகம் செய்திருப்பதாக சிலர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

66
Pushpa 2 Special Emoji

இந்நிலையில், புஷ்பா 2 க்கு எலோன் மஸ்க் சிறப்பு லைக் பட்டனை உருவாக்கி இருக்கிறார் என்பது முற்றிலும் பொய்யான செய்தி என Fact Check வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர். "புஷ்பா பதிவுகளுகுக சிறப்பு லைக் பட்டன் வழங்கப்படவில்லை. இது சுத்தமான பொய்" என்று அவர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories