Ex Contestants Step Into the Bigg Boss House: பிக்பாஸ் வீட்டில் தற்போது ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதால்... பிக்பாஸ் பழைய போட்டியாளர்களை வீட்டின் உள்ளே அனுப்பியுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி... அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கப்பட்ட நிலையில், தற்போது தான் நிகழ்ச்சி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. உள்ளே இருந்த ஹவுஸ் மேட்ஸ் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு இறங்கி முட்டி மோதிக்கொண்டதாலும், கத்தி கூப்பாடு போட்டு வந்ததாலும், அவர்களின் திறமையை வெளியே கொண்டுவர வைல்டு கார்டு மூலம் சில புதிய போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளார் பிக்பாஸ்.
24
திவ்யா கணேஷ் வெற்றி:
அதன்படி கடந்த வார இறுதியில், அமித் பார்கவ், திவ்யா கணேஷ், ப்ரஜின் மற்றும் அவருடைய மனைவி சாண்ட்ரா எமி ஆகியோர் உள்ளே நுழைந்து தங்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உள்ளே வந்த 4 போட்டியாளர்களை, தலைவர் போட்டியில் பங்குபெற வைத்த நிலையில் திவ்யா கணேஷ் வெற்றி பெற்று, உள்ளே வந்த இரண்டாவது நாளே தலைவர் பதவியை தட்டி தூக்கியுள்ளார்.
34
சூப்பர் டீலக்ஸ் கேன்சல் :
அதே போல், இதுநாள் வரை பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்... சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ் மேட்ஸ் என பிரித்து, சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சூப்பர் டீலக்ஸ் வீட்டை கேன்சல் செய்து முழு வீட்டையும் பிக்பாஸ் வீடாக மாற்றியுள்ளார். வைல்டு கார்டு போட்டியாளர்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் தனித்தனியாக தங்களின் விளையாட்டை பிளே செய்ய துவங்கி இருக்கிறார்கள்
44
உள்ளே சென்ற பழைய போட்டியாளர்கள்:
வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கிய கையேடு... பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்க் மூலம் சில பழைய பிக்பாஸ் போட்டியாளர்களை உள்ளே வர செய்துள்ளார். அதன்படி தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், கடந்த சீசனில் 100 நாட்கள் வரை வெற்றிகரமாக விளையாடி தீபக் மற்றும் பிரியங்கா ஆகியோர் உள்ளே வந்துள்ளனர். அவர்களை, போட்டியாளர்களும் விழுந்து விழுந்து கவனிப்பதை பார்க்க முடிகிறது.