OTT Releases : என்ன விலை முதல் மெடிக்கல் மிராக்கிள் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் என்னென்ன?

Published : Oct 12, 2026, 11:39 AM IST

This Week OTT Releases : ஓடிடியில் இந்த வாரம் கருணாஸ் நடித்த என்ன விலை முதல் மெடிக்கல் மிராக்கிள் வரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
15
This Week OTT Releases

பண்டிகைக் காலம் நெருங்கிவிட்ட நிலையில், திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடி தளங்களும் ரசிகர்களுக்குப் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வழங்கத் தயாராகி வருகின்றன. குறிப்பாக, அக்டோபர் 12 முதல் 18 வரையிலான இந்த வாரத்தில் அரசியல் த்ரில்லர், ஆக்‌ஷன், டார்க் காமெடி, ரியாலிட்டி ஷோ மற்றும் மர்மம் நிறைந்த திரைப்படங்கள் எனப் பல்வேறு வகையான படைப்புகள் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் மனோரமா மேக்ஸ் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் இந்த வாரம் ரசிகர்களுக்காக என்னென்ன காத்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

25
என்ன விலை

ஒரு மீனவரின் கையில் சிறிய தங்க ஆபரணம் கிடைக்கிறது. அது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என அவர் நினைக்கிறார். ஆனால், அதுவே அவருடைய ஃபேமிலியின் நிம்மதியையும், வாழ்க்கையையும் டோட்டலாக புரட்டிப்போடுகிறது அதுதான் ‘என்ன விலை’ படத்தின் கதை.

கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தற்போது இப்படம் அக்டோபர் 15-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்கலாம்.

35
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

தி ஸ்டார்ம்

குடும்ப உறவுகளையும் எதிர்பாராத சம்பவங்களையும் நகைச்சுவை கலந்த வித்தியாசமான அணுகுமுறையில் சொல்லும் ஸ்வீடிஷ் டார்க் காமெடி திரைப்படம்தான் தி ஸ்டார்ம். ஜோசஃபின் போர்னெபுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை, பிலிப் என்பவரின் 45-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக ஒரு பெரிய புயல் குறுக்கிடுகிறது.

இதனால் பிறந்தநாள் விழாவில் ஏற்படும் குழப்பங்களும், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வெளிப்படும் உணர்வுகளும் படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. இந்த டார்க் காமெடி திரைப்படம் அக்டோபர் 15, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சாக்ரிஃபைஸ்

ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்காக இந்த வாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு படைப்பு சாக்ரிஃபைஸ். கிறிஸ் எவான்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தில், மைக் டைலர் என்ற ஹாலிவுட் நடிகரின் வாழ்க்கையைச் சுற்றி கதை நகர்கிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோ காரணமாக அவரது புகழுக்கும் திரைப்பயணத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

இழந்த மரியாதையையும் தனது பழைய செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் பல்வேறு எதிர்பாராத சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன. ஆக்‌ஷன் மற்றும் அட்வென்ச்சர் அம்சங்களுடன் உருவாகியுள்ள சாக்ரிஃபைஸ் திரைப்படம் அக்டோபர் 16, அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்

ரோடீஸ் ரீபர்த்

இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ரோடீஸ், இந்த முறை ரீபர்த் என்ற புதிய சீசனுடன் திரும்பவுள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய கேங் லீடர்களுக்கும் புதிய தலைமுறை கேங் லீடர்களுக்கும் இடையே நடைபெறும் போட்டிதான் இந்த சீசனின் முக்கிய அம்சமாக இருக்கும். பழைய அணியில் பிரின்ஸ் நருலா, நேஹா தூபியா மற்றும் நிகில் சின்னப்பா ஆகியோர் இடம்பெறுவதாகவும், புதிய அணியில் அபிஷேக் மல்ஹான், பானி ஜே மற்றும் பஸீர் அலி ஆகியோர் இணைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியை ரண்விஜய் சிங்கா தொகுத்து வழங்கவுள்ளார். சவாலான போட்டிகள், அணிகளுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகும் ரோடீஸ் ரீபர்த் அக்டோபர் 16, அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

மாஸ்டர் பிளான்

இந்த வார ஓடிடி வெளியீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு படைப்பு மாஸ்டர்பிளான். இப்படத்தின் கதைக்களம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. இருப்பினும், அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்தப் படைப்பு டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மாஸ்டர்பிளான் திரைப்படம் அக்டோபர் 16, அன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
ஓடிடி ரிலீஸ்

தி டிப்ளமேட் சீசன் 4

அரசியல் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் தொடர்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு தி டிப்ளமேட் சீரிஸ் முக்கியமான தேர்வாக இருக்கும். அமெரிக்க அரசியலில் நடைபெறும் அதிகாரப் போட்டிகள், சர்வதேச உறவுகள் மற்றும் ரகசியத் திட்டங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

நான்காவது சீசனில் அமெரிக்க அதிபர் கிரேஸ் பென் கதாபாத்திரத்தில் அலிசன் ஜானியும், ஹால் வைலர் கதாபாத்திரத்தில் ரூஃபஸ் செவெலும் இடம்பெறுகின்றனர். ரஷ்யாவின் அணு ஆயுதம் தொடர்பான ரகசியத் திட்டம் புதிய அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் கதை நகரும் எனக் கூறப்படுகிறது. இந்த அரசியல் த்ரில்லர் தொடரின் நான்காவது சீசன் அக்டோபர் 15, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்

மலையாள சினிமா ரசிகர்களுக்காக இந்த வாரம் ஓடிடி வெளியீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான மர்மத் திரைப்படம் இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள். சங்கீத் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ஷரஃபுதீன் மற்றும் அகிலா பார்கவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்குச் செல்லும் கதாநாயகன், எதிர்பாராத விதமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் கேட்ட ஒரு செவிலியரின் குரல், அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. குணமடைந்த பிறகு அந்தக் குரலுக்குச் சொந்தமான பெண்ணைத் தேடிச் செல்லும் அவருக்கு, பல்வேறு மர்மமான சம்பவங்கள் காத்திருக்கின்றன. அந்தச் செவிலியர் யார்? அவரது குரலுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? என்பதே படத்தின் சுவாரஸ்யமான கதைக்களம்.

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, இந்த மலையாள மர்மத் திரைப்படம் அக்டோபர் 15, அன்று மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories