4 Tamilnadu Chief Ministers Acted in a Tamil Movie : சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் மல்டி ஸ்டாரர் படங்கள் அதிகளவில் வருகின்றன. ஒரு படம் பான் இந்தியா அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் அதற்கு பல திரையுலகை சேர்ந்த நடிகர்களை நடிக்க வைப்பது அவசியமாக உள்ளது. ஆனால் 1970-களிலேயே ஒரு தனித்துவமான மல்டி ஸ்டார் படம் வந்திருக்கிறது. அந்த படத்தில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த 4 முதலமைச்சர்களான அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் நடித்திருந்தனர். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.
24
Engal Thangam Movie
MGR - ஜெயலலிதா நடித்த எங்கள் தங்கம்
அந்த படத்தின் பெயர் ‘எங்கள் தங்கம்’. இப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். இப்படத்தில் கதையின் நாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த இப்படத்தை முரசொலி மாறன் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்திற்கு மூன்று தமிழக அரசின் விருதுகளும் கிடைத்தன.
இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் பின்னாளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். அதேபோல் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இவர்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்கள் தான். இப்படி நான்கு தமிழ்நாட்டு முதல்வர்கள் நடித்த ஒரே படம் என்கிற பெருமையை எங்கள் தங்கம் திரைப்படம் பெற்றிருக்கிறது.
44
MGR - Jayalalitha
சம்பளமே வாங்காமல் நடித்த MGR - Jayalalitha
எங்கள் தங்கம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் நடித்தார்களாம். இப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‘நான் செத்து பிழைச்சவன் டா’ என்கிற பாடல், எம்ஜிஆரை கடந்த 1967-ம் ஆண்டு எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பாடலாகும். இந்த பாடலை கவிஞர் வாலி தான் எழுதி இருந்தார். இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் இடம்பெற்ற 6 பாடல்களையும் டி.எம்.செளந்தர்ராஜன் தான் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.