
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா:
விஜய் டிவியில் சீரியல் அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலே, அவர்கள் அதிரடியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுவார்கள் என நம்பப்படுகிறது. இதுவே விஜய் டிவி தொகுப்பாளர் என்றால்? சொல்லவா வேண்டும். அந்த வகையில், விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான குறுகிய நாளிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் தான் பிரியங்கா தேஷ் பாண்டே. இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
விஜய் டிவியில் அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தவர் பிரவீன் குமார்:
ஜீ தமிழில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பிரியங்கா, விஜய் டிவியில் அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தவர் இவருடைய முதல் கணவர் பிரவீன் குமார். ஆரம்பத்தில் இருவரும் நண்பராக பழகி வந்த நிலையில், பின்னர் காதலாக மாறினர். பிரவீன் குமார் தற்போது வரை விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தயாரிக்கும் ப்ரோக்ராம் புரொடியூசர் பொறுப்பில் உள்ளார்.
பிரியங்கா தேஷ்பாண்டே 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்:
இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும், சம்மதம் தெரிவிக்க... பிரவீன் குமாரை, பிரியங்கா தேஷ்பாண்டே 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமானபின்னர் கணவர் போட்ட சில நிபந்தனைகள் பிரியங்காவுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருவருக்குள்ளும் தூரத்தை அதிகரிக்க, பிரியங்கா தன்னுடைய தாயாருடன் அவருடைய வீட்டிலேயே தங்க துவங்கினார். இருவரையும் சேர்த்து வைக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரவீன் குமாரின் பிடிவாதத்தால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
2022 ஆம் ஆண்டு விவாகரத்து:
அதன்படி பிரியங்கா மற்றும் பிரவீன் இருவரும், 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆரம்பத்திலிருந்து தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து அதிகம் பேசாத பிரியங்காவின் விவாகரத்து விஷயமும் அவரின் குடும்ப வட்டாரத்தை தவிர வேறு எங்கும் கசியவில்லை. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போது கூட... இவரைப் பார்க்க இவருடைய தாயார் மட்டுமே உள்ளே வந்தார்.
விஜய் டிவியில் பணியாற்றிவரும் முதல் கணவர்:
ஏன் ப்ரியங்காவின் கணவர் மற்றும் அவருடைய வீட்டை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை என்கிற கேள்வி எழுந்தபோது, இதற்கு பிரியங்கா தரப்பில் இருந்து... தன்னுடைய கணவர் பிரவீன் குமார் விஜய் டிவியில் பணியாற்றி வருவதால், சில நிபந்தனைகளை அடிப்படையில் அவர் உள்ளே வரக்கூடாது என்பது போல் தெரிவிக்கப்பட்டது.
பிரியங்கா அம்மாவின் கருத்து:
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைகள் குறித்த தகவல்கள் கசிய தொடங்கின. பிரியங்காவின் தாயாரே ஒரு கட்டத்தில் இது குறித்து ஒரு பேட்டியில் தன்னுடைய மகள் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதை உறுதி செய்தார். மேலும் பிரியங்காவும் தன்னை திருமணம் செய்து கொள்பவர் தங்கம் போல் தன்னை தாங்க வேண்டும், எல்லையில்லா அன்பை கொடுக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார்.
பிரியங்கா - வசி திருமணம்:
இந்த நிலையில் தான் பிரியங்காவுக்கும் டிஜே வசி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. வாசி ஒரு இலங்கை தமிழராம். அரசியல் குடும்பப் பின்னணியை கொண்டவர். இவர் சொந்தமாக வைத்திருக்கும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரியங்கா இலங்கைக்கு சென்ற போது தான் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனக்குள் இருக்கும் பீலிங் மிகவும் நன்றாக இருக்கிறது:
பிரியங்காவின் இரண்டாவது கணவர் வசி பற்றிய அடுத்த அடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாவது ஒரு புறம் இருக்க, தற்போது பிரியங்கா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். திருமணத்திற்கு பின்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது என எழுப்பப்பட்ட கேள்விக்கு? "என்னுடைய திருமணத்திற்கு பின்பு, எனக்குள் இருக்கும் பீலிங் மிகவும் நன்றாக இருக்கிறது. ரொம்ப ஜாலியா இருக்கேன். என பேசி உள்ளார். மேலும் திருமணம் ஆன கையோடு வசி மற்றும் பிரியங்கா இருவரும், அமீர் - பாவனி திருமண விசேஷத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
பாவனி - அமீர் திருமணத்தில் கணவருடன் பிரியங்கா
பாவனி-க்கு ஒரு நாத்தனார் போல் இருந்து, இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்ததே பிரியங்கா மற்றும் அவரின் கணவர் தான் என கூறப்படுகிறது. இது குறித்த சில புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. பின்னர் திருமண தம்பதிகள் எப்படி இருக்க வேண்டும் என பிரியங்கா அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதாவது தம்பதிகள் எப்போதுமே "சிறந்தவர்களில் சிறப்பாக இருக்க வேண்டும். அவர்களுடைய ரிலேஷன்ஷிப்பில் நட்பு இருந்தால் தான், ஒரு அது அழகிய காதலாக மாறும் என பேசி உள்ளார். இவருடைய இந்த கருத்துக்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.