Good Bad Ugly Tamilnadu Box Office Report : அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் பிரியா வாரியர், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன், அர்ஜுன் தாஸ், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.
24
Good Bad Ugly
கம்பேக் கொடுத்த Ajith
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதலாவதாக விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. விடாமுயற்சி தோல்வியால் அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லியை தான் ரசிகர்கள் மலைபோல் நம்பி இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் குட் பேட் அக்லி திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. இப்படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் அஜித்.
குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆன 9 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடி என்கிற இமாலய வசூலை வாரிக்குவித்தது. பின்னர் இந்த வாரமும் அப்படத்துக்கு போட்டியாக எந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாததால், குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து வருகிறது. இப்படம் விரைவில் 250 கோடி என்கிற இமாலய வசூலை எட்டவும் வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் அஜித்தின் கெரியரில் 250 கோடி வசூலித்த முதல் படம் என்கிற சாதனையை குட் பேட் அக்லி படைக்கும்.
44
Good Bad Ugly Box Office Record
தமிழ் நாடு பாக்ஸ் ஆபிஸில் Good Bad Ugly படைத்த சாதனை
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை இதுவரை அதிக வசூல் செய்த அஜித் படமாக விஸ்வாசம் இருந்து வந்தது. அப்படம் தமிழ்நாட்டில் 127 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது முறியடித்து உள்ளது. அப்படம் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் 133 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற பெருமையை குட் பேட் அக்லி பெற்றுள்ளது.