Ajith Team Wins in GT4 Europe Car Race : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், சினிமாவை தாண்டி தன்னுடைய பேஷன் ஆன கார் ரேஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இனி கார் ரேஸ் நடைபெறும் காலகட்டங்களில் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அஜித் அறிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு அதன் மீது அஜித்துக்கு கிரேஷ் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் நடிகர் அஜித் தொடர்ச்சியாக மூன்று கார் பந்தயங்களில் கலந்துகொண்டுள்ளார். அதில் மூன்றிலுமே அவரது அணி வெற்றிவாகை சூடி உள்ளது.
24
Ajithkumar
வெற்றியை கொண்டாட முடியாத Ajith
அஜித் நடிப்பில் அண்மையில் தான் குட் பேட் அக்லி என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். தரமான ஃபேன் பாய் சம்பவமாக இப்படத்தை இயக்கி இருந்த ஆதிக், அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து படைத்திருந்தார். இதனால் குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. தன் படத்தின் வெற்றியை கூட கொண்டாட முடியாத அளவுக்கு கார் ரேஸில் செம பிசியாக உள்ளார் அஜித்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டார் அஜித். 24 மணிநேரம் நடைபெற்ற இந்த கார் ரேஸில், நடிகர் அஜித்குமாரின் அணி 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து ஐரோப்பாவில் நடைபெற்ற 12 மணிநேர ரேஸில், அஜித்தின் அணி 3ம் இடம் பிடித்து அசத்தியது. பின்னர் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜிடி 4 கார் பந்தயத்தில் அஜித்தின் அணி களமிறங்கியது. இந்த கார் பந்தயமும் 12 மணிநேரம் நடைபெற்றது. இதிலும் வெற்றிபெற்றதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளார் அஜித்.
44
Ajithkumar Hatrick Victory
Ajith-க்கு குவியும் வாழ்த்து
நடிகர் அஜித்குமாரின் இந்த தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் வெள்ளிப்பதக்கம் வாங்குவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு ரேஸிலும் வெண்கலப் பதக்கங்களே கிடைத்த நிலையில், முதன்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார் அஜித். ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு ரேஸராக அஜித் தொடர் வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.