எம்புரான் படத்துக்கு கடும் எதிர்ப்பு எதிரொலி; சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதா?
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவான எம்புரான் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதா என்பதை பற்றி பார்க்கலாம்.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவான எம்புரான் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதா என்பதை பற்றி பார்க்கலாம்.
Empuraan: Changes in Mohanlal's film - New version released! பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த படம் எம்புரான். இந்த படம் கடந்த மார்ச் 27-ந் தேதி திரைக்கு வந்தது. மலையாள திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே இப்படத்திற்காக காத்திருந்தது. ஏனெனில் இது லூசிபர் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன எம்புரான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடினாலும் இப்படத்தை சுற்றி சர்ச்சைகளும் எழுந்தன.
எம்புரான் படத்திற்கு எதிர்ப்பு
படத்தில் இடம்பெறும் குஜராத் கலவர காட்சிகள், மத்திய அரசுக்கு எதிரானவர்களை தேசிய ஏஜென்சி வழக்குகளில் சிக்க வைப்பது போன்ற காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுமட்டுமின்றி பாபா பஜ்ரங்கி என்ற வில்லனின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனால் படக்குழு வேறுவழியின்றி படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பி அதில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவெடுத்தது. அந்த வகையில் மறு தணிக்கையில் மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன.
இதையும் படியுங்கள்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரானை ஓட ஓட விரட்டிய வீர தீர சூரன்!
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதா?
கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி உட்பட சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் படத்தில் வில்லனின் பஜ்ரங்கி என்ற பெயரும் மாற்றப்படும் என கூறப்பட்டது. மறு எடிட் செய்யப்பட்ட பதிப்பை உடனடியாக திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என மத்திய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதையடுத்து அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் மறுதணிக்கை செய்யப்பட்ட பதிப்பு இன்று முதல் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பதிப்பை ரிலீஸ் செய்யவில்லை. இன்று மாலை அந்த பதிப்பு வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் வேட்டையாடும் எம்புரான்
முன்னதாக திரைப்படத்தின் சர்ச்சைகள் குறித்து மோகன்லால் வருத்தம் தெரிவித்தார், மேலும் பிருத்விராஜ் மோகன்லாலின் முகநூல் பதிவை பகிர்ந்திருந்தார். கதை எழுதிய முரளி கோபி இதுவரை சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை. சினிமா அமைப்புகளும் இந்த விஷயத்தில் மௌனம் காத்து வருகின்றன. சர்ச்சைகளுக்கு மத்தியிலும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் எந்த ஒரு மலையாள திரைப்படமும் செய்திராத மிகப்பெரிய வசூலை எம்புரான் செய்துள்ளது.
இதையும் படியுங்கள்... சர்ச்சை காரணமாக 'எல்2 எம்புரான்' படத்தை நான் பார்க்கப் போவதில்லை ! ராஜீவ் சந்திரசேகர் பேட்டி !