காந்தா செப்டம்பர் 12ந் தேதி ரிலீஸ் ஆகாது... திடீரென தள்ளிவைக்கப்பட்ட துல்கர் சல்மான் படம் - காரணம் என்ன?

Published : Sep 11, 2025, 03:40 PM IST

Kaantha : துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படம் செப்டம்பர் 12ந் தேதி ரிலீஸ் ஆகாது என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

PREV
14
Kaantha Release Postponed

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் மற்றும் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரிக்கும் படம் 'காந்தா'. துல்கர் ஜோம் வர்கீஸ், ராணா டகுபதி, பிரசாந்த் போட்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். 'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்' என்ற நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத் தொடரை இயக்கிய செல்வமணி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் இது.

24
காந்தா திரைப்படம்

1950களில் சென்னையைப் பின்னணியாகக் கொண்ட கதை இது. துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் பான் இந்தியா படம் இது. தமிழில் உருவாகும் இப்படம் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகும். டேனி சான்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜானு சாண்டர் இசையமைத்துள்ளார். ராமலிங்கம் கலை இயக்குநராகவும், பூஜிதா தடிகொண்டா, சஞ்சனா ஸ்ரீனிவாஸ் ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

34
காந்தா பட ரிலீஸ் தள்ளிவைப்பு

காந்தா திரைப்படம் செப்டம்பர் 12ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென அப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து காந்தா படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பும் மதிப்பும் மிக்க ரசிகர்களே எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதில் இருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம். எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

44
காரணம் என்ன?

சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம். மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவைத் வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம். இதற்காக, காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கின்றோம். உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி! உங்களைத் திரையரங்கில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம்!” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories