தியேட்டர்களில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் 'லோகா' படம், மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் 65 கோடி ரூபாய் வசூலித்த இப்படம், சமீபத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. தற்போது, படத்தின் லாபத்தில் ஒரு பங்கை லோகா படக்குழுவுடன் பகிர்ந்துகொள்வதாக தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
24
லோகா படக்குழுவுக்கு லாபத்தில் பங்கு
லோகா படம் ஐந்து பாகங்களாக படம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இன்னும் அதிகரிக்குமா என்பது தெரியவில்லை என்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துல்கர் கூறினார். அவர் பேசுகையில், “ஐந்து பாகங்களாகத்தான் படம் முதலில் திட்டமிடப்பட்டது. இன்னும் அதிகரிக்குமா என்று தெரியவில்லை. அதற்கான வாய்ப்பு உள்ளது. லாபத்தில் ஒரு பங்கை படக்குழுவுடன் பகிர்ந்துகொள்வோம். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள்” என்று துல்கர் கூறினார்.
34
லோகாவுக்கு அதிகரிக்கும் வரவேற்பு
டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம், சிறந்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமும் இதுதான். டொமினிக் அருண் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.
மலையாள சினிமாவில் முதல் முறையாக ஃபிலிம் பிரான்சைஸுக்கு லோகா மூலம் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். லோகா என்ற பெயரில் ஒரு சூப்பர் ஹீரோ சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படம் 'சந்திரா'. சூப்பர் ஹீரோவான சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படத்தில் நஸ்லன் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சன்னி. ஃபேன்டஸி வகையில் வெளியான இப்படத்திற்கு முதல் நாள் முதலே சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.