ஜோராக நடக்கும் டிக்கெட் முன்பதிவு... பைசன் vs டியூட் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலை வாரிசுருட்டியது யார்?

Published : Oct 15, 2025, 02:00 PM IST

பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் காளமாடன் திரைப்படமும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.

PREV
14
Dude Movie Diwali Release

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் மற்றும் கேரளத்து பியூட்டி மமிதா பைஜு நடிக்கும் 'டியூட்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் ரிலீஸ் ஆகிறது. இசை உலகில் புதிய சென்சேஷனான சாய் அபியங்கர் இசையமைத்த பாடல்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வைரலாகிவிட்டன. படத்தின் ஒவ்வொரு பாடலும் சுவாரஸ்யமான முறையில் வெளியிடப்பட்டது. முதல் பாடலான ‘ஊரும் பிளட்’ ஃபர்ஸ்ட் கியர் என்ற டேக்லைனுடன் வெளியானது. அதைத் தொடர்ந்து 'நல்லாரு போ' பாடல் செகண்ட் கியராக வந்தது. இறுதியாக 'சிங்காரி' பாடல் தேர்ட் கியர் என்ற டேக்லைனுடன் வந்துள்ளது.

24
Bison vs Dude Box Office

இந்த நிலையில், டியூட் படத்தின் டிக்கெட் புக்கிங்கும் ஓபன் ஆகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி டியூட் திரைப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வரை 38 லட்சம் வசூலாகி இருக்கிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்கள் உள்ளதால் டியூட் திரைப்படம் 1 கோடிக்கு மேல் முன்பதிவில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் மாரி செல்வராஜின் பைசன் காளமாடன் திரைப்படத்தின் முன்பதிவும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தற்போது வரை 10 லட்சம் ரூபாய் முன்பதிவு மூலம் வசூல் கிடைத்துள்ளது.

34
பிரதீப் ரங்கநாதனின் டியூட்

குறும்படங்கள் மூலம் இயக்குநராகி, பின்னர் நடிகராக மாறிய பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் எழுதி இயக்கிய 'கோமாளி' மற்றும் 'லவ் டுடே' மிகப்பெரிய வெற்றி பெற்றன. நாயகனாக நடித்த 'லவ் டுடே', 'டிராகன்' படங்களையும் ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது 'டியூட்' படத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கும் 'டியூட்' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரிக்கின்றனர்.

44
டியூட் படக்குழு

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் ஆர். சரத்குமார், நேஹா ஷெட்டி, ஹிரிது ஹாரூன், சத்யா, ரோகிணி, திராவிட் செல்வம், ஐஸ்வர்யா சர்மா, கருடா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்கிறார். இணை தயாரிப்பாளர்: அனில் யெர்னேனி, ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி, சண்டைப்பயிற்சி: யானிக் பென், தினேஷ் சுப்பராயன், பாடல்கள்: விவேக், பால் டப்பா, ஆதேஷ் கிருஷ்ணா, செம்வி, நடன அமைப்பு: அனுஷா விஸ்வநாதன், கலை இயக்கம்: பி.எல். சுபேந்தர்.

Read more Photos on
click me!

Recommended Stories