நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தற்போது இவர் கைவசம் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் என ஏராளமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் உள்ளன.